புதுடெல்லி, இந்தியா, உக்ரைன் வியட்நாம் உள்பட 26 நாடுகளில் பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விவசாயம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், இந்தியாவில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மொத்த விவசாய வருமானம் 14 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த காலகட்டத்தில், இந்திய விவசாயிகள் தாங்கள் உறப்த்தி செய்த பொருட்களுக்கு சர்வதேச விலையில் இருந்து மிக குறைவான அளவையே பெற்றிருக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் விவசாயத்தில் முதலீடுகளை அதிகரிக்காமல் மானியத்தையே தொடர்ந்து அரசு வழங்கியுள்ளது. இதனால், விவசாயம் என்பது குறைந்த வருவாய் பெறும் அல்லது நஷ்டத்தை சந்திக்கும் தொழிலாக சுருங்கிவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குறைந்த பட்ச ஆதரவு விலையை பயிர்களுக்கு உயர்த்தி வழங்கி விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-dailythanthi.com