கர்நாடகாவிற்கு 2வது தலைநகர்?

பெங்களூரு: கர்நாடகாவிற்கு பெங்களூரு தலைநகராக இருக்கும் நிலையில், 2வது தலைநகரம் அமைப்பது பற்றி முதல்வர் குமாரசாமி ஆலோசித்து வருகிறார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் கர்நாடகாவின் வட மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், சட்டசபையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனவும் கூறிய அப்பகுதியை சேர்ந்த சில அமைப்பினர், தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடத்த துவங்கினர்.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி இதை உறுதிப்படுத்துகிறது. அதில், கர்நாடகாவிற்கு 2வது தலைநகர் தேவை என 12 ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். அடுத்து வந்த அரசுகள் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தான், பெலகாவி (பெல்காம்) நகரில் சட்டசபை கட்ட வேண்டும்; சட்டசபை தொடர் நடத்த வேண்டும்; அரசு அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்றேன். இந்த விவகாரத்தை பா.ஜ., தான் பெரிதுபடுத்துகிறது. அடுத்த 20 நாளில், 2வது தலைநகர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன். மங்களூருவை பொருளாதார தலைநகராக அறிவிக்கும் திட்டமும் உள்ளதாக கூறினார்.
ஆனால் கர்நாடக வட மாவட்ட மக்கள் இதை ஏற்கவில்லை. ”தனி மாநிலம் கேட்டால், தலைநகரை மட்டும் தருகிறாரா” என கேட்கின்றனர்.

-dinamalar.com

TAGS: