மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் பாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி. பேச்சு

புதுடெல்லி, பாராளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் மத்திய பிரதேச மாநில பா.ஜனதா எம்.பி. உதேய் பிரதாப் பேசுகையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும், ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள்தான் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் மக்கள் தொகை உயர்ந்து வருவது குறிப்பிட்டு பேசிய அவர் வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு நிலைகளில் பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும் எனவும் கூறினார்.

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. அதேபோன்று மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

-dailythanthi.com

 

TAGS: