காரில் சிறுமிகள் காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் என உத்தரவிட்டுளள்ளது.
பீஹாரில் காப்பகம் ஒன்றில் கிட்டத்தட்ட 40 சிறுமிகள் காப்பக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பாலியல் கொடுமைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் ஏற்கனவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த கொடூர சம்பவத்தில் பாலியல் கொடுமை செய்யப்பட்ட ஒரு சிறுமி காப்பக வளாக இடத்திலேயே புதைக்கப்பட்டுள்ளார் என்ற புகாரை அடுத்து போலீசார் மேற்பார்வையில் அங்கு புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்றுவந்தது.
பீஹாரில் முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் இயங்கிவந்த தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சுமார் 7 வயதுமுதல் 17 வயதுடைய 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் காப்பக ஊழியர்கள், அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 10-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவரை காணவில்லை என தெரிந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஊழியரால் பாலியல் கொடுமை செய்யப்பட்ட அந்த சிறுமி காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஜெ.சி.பி இயந்திரத்துடன் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணியில் இறங்கினர். முதல்கட்டத்தில் மீட்கப்ட்ட 21 சிறுமிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 16 சிறுமிகள் பாலியல் கொடுமை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டிருந்தது.
நாட்டையே உலுக்கிய இந்தசம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மொத்தம் இருதுவரை 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 6 பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரிஜேஷ் தாக்கர் எனும் கொடூரனை அண்மையில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் மேலும் சம்பந்தப்பட்ட சிறுமிகளின் மார்பிங் புகைப்படங்கள் அல்லது மங்கலான புகைப்படங்கள் என எதையும் ஊடங்கள் வெளியிடக்கூடாது என உத்தரவிடுத்துள்ளது.
-nakkheeran.in