ராஜிவ் கொலை கைதிகளை விடுவிக்க முடியாது – இந்திய அரசு அறிவிப்பு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர், 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து இந்திய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

இந்த வழக்கில், இந்திய மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், “ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த முடிவு தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.

-puthinappalakai.net

TAGS: