திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அம்மாநிலத்தையே மொத்தமாக சூறையாடியுள்ளது. அம்மாநில வரலாற்றில் இல்லாத பெரிய மழையை தற்போது சந்தித்து வருகிறது.
இடுக்கி, கோழிக்கோடு, கொச்சி தொடங்கி எல்லாம் மாவட்டங்களும் மொத்தமாக நீரில் மூழ்கி உள்ளது. மக்கள் சாப்பாடு, தங்க இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
கேரளா மாநிலம் முழுக்க தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது.
மரணம்
கேரளாவில் உள்ள 26 அணைகளில் இருந்தும் கடலுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை மழை , வெள்ளத்தால் அங்கே 26 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுதான் கேரளா மூழ்கி இருக்கும் காட்சி.
மழை மழை
இந்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கண் முன்னே கட்டிடங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் நடக்கிறது. மிக மோசமான வரலாற்று அழிவை அம்மாநிலம் தற்போது எதிர்கொண்டு உள்ளது.
இடுக்கி அணை
ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை இதனால் 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. தற்போது முழு கொள்ளளவை இந்த அணை எட்டி இருக்கிறது. அங்கு பெய்யும் கனமழையால் இந்த அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
மிகப்பெரிய பேரழிவு
கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. மலை பகுதிகள், சாலைகள், கிராமங்கள் எல்லாமும் மொத்தம் நீரில் மூழ்கி அழிந்து இருக்கிறது.