திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரியது ஆகும். இந்த வெள்ளத்தின் பாதிப்புகள் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய அளவில் மழை பெய்கிறது. 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
எண்ணிக்கை
கேரளா வெள்ளம் காரணமாக தற்போது பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு காரணமாகவும், நீரில் மூழ்கியது காரணமாகவும் இவ்வளவு மரணம் நிகழ்ந்துள்ளது. மேலும் 150க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் காணவில்லை.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளம்
இந்த வெள்ளம் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடப்பட்ட போது வந்த வெள்ளத்தை விட பெரியது ஆகும். அதை விட கேரளா வெள்ளம் 5 மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. இது மொத்தம் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களை மூழ்க வைத்துள்ளது.
ராணுவம்
கேரளாவில் ராணுவமும், பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் மிகவும் கஷ்டப்பட்டு இவர் மீட்பு பணியில் ஈடுபடும் புகைப்படம் வைரலாகி உள்ளது.
உலகம் முழுக்க
கேரளாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவது வழக்கம். இதனால் இது சீனா, அமெரிக்கா என்று எல்லா நாடுகளிலும் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. இது சீனா செய்தி இணையத்தில் வந்த செய்தி.
பெரிய நிலச்சரிவு
இங்கு வெள்ளம் ஏற்பட்டதை போலவே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர்.
மீட்பு பணிகள்
வெள்ளம் வடிந்து இருக்கும் சில பகுதிகளில் மட்டும் தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. உணவுகள், போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது.
குருவாயூர் கோவில்
வெள்ளம், மழைக்கு மத்தியிலும் மக்கள் குருவாயூர் கோவிலுக்குள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.