காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம்.. நள்ளிரவில் உடைந்த கொள்ளிடம் பாலம்

திருச்சி: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது.

நேற்று இரவோடு இரவாக இந்த பாலம் உடைந்தது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது. தமிழகத்திற்கு 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

விரிசல் விழுந்தது

இதனால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது. இந்த நிலையில்தான் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டது. 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டது.

விரிசல் அதிகமானது

நேரம் போக போக பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமானது. பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.பாலம் மோசமான நிலையில் இருந்ததால் பயணிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தபட்டது. மேலும், அதிக எடை கொண்ட வாகனங்களை ஓட்டி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

பாலம் உடைந்தது

இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக இந்த பாலம் உடைந்தது. காவிரியில் அதிக நீர் வரும் நிலையில் பாலம் உடைந்தது. நேற்று இரவு அதிக தண்ணீர் வந்த நிலையில் பாலம் உடைந்தது. இது குறித்த அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

சோதனை நடத்தி வருகிறார்கள்

தற்போது அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மாற்று போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த இரும்பு பாலம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: