திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை காப்பாற்றுவதில் அம்மாநில மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பல லட்சம் மக்களை இவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசு இவர்களை கைவிட்டுவிட்டதாக பெரிய புகார் எழுந்துள்ளது.
தென்மாநில மக்கள் மட்டுமே இவர்களுக்கு உதவுவதாக கூறப்படுகிறது. கேரளாவில் கடந்த மூன்று வாரமாக பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஒருவாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த முறையும் மீனவர்கள்
சென்னையில் வெள்ளம் வந்த போது லட்சக்கணக்கில் மீன்வர்கள்தான் வந்த உதவினார்கள். காசிமேடு தொடங்கி மெரினா வரை சிறு சிறு வீடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வேலையைவிட்டுவிட்டு கப்பலை எடுத்துக் கொண்டு ஊருக்குள் வந்தனர். இதேதான் தற்போது கேரளாவிலும் நடந்துள்ளது. வெள்ளம் என்று தெரிந்துவுடன், எல்லா மாவட்டத்திலும் கடலுக்கு அருகில் வசிக்கும் மீனவர்கள் களமிறங்கி உள்ளனர்.
கேரளாவில் களமிறங்கினார்கள்
கடந்த ஒருவாரமாக அதிக மீட்பு பணிகளில் இவர்கள்தான் ஈடுப்பட்டது. ராணுவம் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஆனது. இதனால் இந்த மீன்வர்கள்தான் உணவு கொடுப்பது, உடை கொடுப்பது, தத்தளிப்பவர்களை காப்பது என்று பல வேலைகளை செய்து இருக்கிறார்கள். இவர்கள் இல்லையென்றால் இந்த மீட்பு பணியே நடந்து இருக்காது என்று கூறுகிறார்கள்.
எல்லா இடத்திற்கும்
குறைந்த ஹெலிகாப்டர் இருந்ததால் ராணுவம் செல்லாத இடங்களுக்கு கூட இவர்கள் கப்பலில் சென்று இருக்கிறார்கள். இரண்டு நாட்களில் மட்டும் மீனவர்கள் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை காப்பாற்றி இருக்கிறார்கள். இன்னும் விடாது அவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள்.
பெரிய பாராட்டு
இந்த நிலையில்தான் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த மீனவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளில் ராணுவத்தை விட மீனவர்கள்தான் அதிகம் உதவியது என்று கூறியுள்ளார். மீனவர்கள் இல்லை என்றால் இந்த மீட்பு பணிகளே நடந்து இருக்காது என்று கூறியுள்ளார். மீனவர்கள்தான் கேரளாவில் உண்மையான ராணுவ வீரர்கள் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.