புதுடில்லி: மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்த விவரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.
கோரிக்கை
பயங்கரவாத மற்றும் பணமோசடி தொடர்பாக மதபோதகர் ஜாகிர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்த அவர் தாயகம் திரும்ப மறுத்துவிட்டார். தற்போது அவர் மலேஷியாவில் தங்கியுள்ளார். அவரை நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டிடம் வெளியுறவு அமைச்சம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனு
இந்நிலையில், ஜாகிர் நாயக் நாடு கடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் இதற்கு மலேஷியா அளித்த பதில் குறித்த விவரங்களை அளிக்கும்படி பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளிக்கப்பட்டது.
160 மனுக்கள்
இதற்கு மத்திய அரசு, ‘இந்தியா சார்பில், நாடு கடத்துவது தொடர்பாக 160 மனுக்கள் பல்வேறு வெளிநாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளன. இவை நிலுவையில் உள்ளன. ஆர்டிஐ சட்டம் பிரிவு 8(1)(a)(f)(h) ன் கீழ் ஜாகிர் நாயக் குறித்த தகவல்களை அளிக்க முடியாது எனக்கூறியுள்ளது.
-dinamalar.com