திராவிடர் வரலாற்றை காத்த வெள்ளையர்!

திராவிடம் என்ற சொற்சொடர் மீண்டும் தென்னிந்தியாவில் உருப்பெற்றுள்ளது. எங்களை நசுக்கினால் திராவிட நாடு அமைய வேண்டி வரும் என்கிற அரைக்கூவல்கள் இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் நரேந்திரமோடியை நோக்கி வீசுகிறார்கள் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள்.

அதுயென்ன திராவிடம்?. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்கள் இணைந்த பகுதி ஒருக்காலத்தில் திராவிடம் என இருந்தது. ஆங்கிலேயர் வந்து ஆட்சி செய்தபோதும் சென்னை ராஜஸ்தானியில் அதிகாரபூர்வமாக திராவிடர் என்கிற பெயரை தாங்கி சங்கங்கள், அமைப்புகள், கட்சிகள் உருவாகின. திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 28 மொழிகள் பிறந்ததாக வரலாற்று மொழியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இம்மொழிகளை பேசும் மக்கள் அனைவரும் திராவிடர்கள் என அழைக்கப்பட்டார்கள். இந்தியாவின் வடபகுதி மக்கள் ஆரியர்கள் என அழைக்கப்பட்டனர். திராவிடர்கள் ஆரியர்களிடம்மிருந்து மொழியால் மட்டும்மல்லாமல் உணவு, கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்திலும்மிருந்து மாறுப்பட்டவர்கள். உலகத்தின் மூத்த மொழி தமிழ்மொழி என்கிற தன்மை உடையவர்கள். இந்த மண்ணின் பூர்வீக மக்கள் திராவிட மக்கள்.

இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்தபின்பு ஆரியர்கள் – திராவிடர்கள் மோதல் எழுந்தது. இப்போதுவரை அது மறைமுகமாக தொடரத்தான் செய்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்தியாவில் வாழும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் பேசும் மக்கள் திராவிடர்கள் என வரலாற்று ஆவணங்களை கொண்டு நிறுவியவர் ராபர்ட் கால்டுவெல் என்கிற அயர்லாந்து நாட்டை சேர்ந்த கிருஸ்த்துவ மதபோதகர் என்பது குறிப்பிடதக்கது.

அயர்லாந்து நாட்டில் கிளாடி என்னும் ஆற்றங்கரையோரம் வாழ்ந்த தம்பதிக்கு 1814ல் பிறந்தார் கால்டுவெல். கால்டுவெல் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது குடும்பம் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு இடம்பெயர்ந்தனர். கிளாசுக்கோ பல்கலைகழகத்தில் இணைந்து கல்வி பயின்றவர், சிறுவயது முதலே மதப்பற்றோடு வளர்ந்தார். கிருஸ்த்துவத்தை உலகம் முழுவதும் பரப்ப இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட லண்டன் மிஷினரி சொசைட்டி என்கிற அமைப்பின் மூலம் இந்தியாவுக்கு 30 மத போதகர்கள் இந்தியாவுக்கு அன்னைமேரி என்கிற கப்பலில் புறப்பட்டனர். கடலில் ஏற்பட்ட புயல் காற்றில் சிக்கி மற்றொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு கப்பல்களில் பயணம் செய்த நூற்றுக்கணக்கானவர்கள் டால்பீன்களுக்கு இறையாகினர். 6 பேர் மட்டும்மே தப்பினர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர். பின்னர் வேறு கப்பல் வந்து உதவிச்செய்ய 1838 ஜனவரி 8ந்தேதி சென்னை துறைமுகத்தில் வந்து இறங்கினார் கால்டுவெல்.

தமிழகத்தில் அவர் சென்ற இடங்களில் எல்லாம் புறக்கணித்தனர் மக்கள். அதற்கு காரணம் மொழி அறியாமை. இதனால் ஒரு சமூக மக்களிடம் உரையாட வேண்டும்மென்றால் அந்த சமூக மக்களின் தாய்மொழியில் உரையாடினால் தான் அம்மக்களுடன் நெருக்கம் ஏற்படும் என்பதை உணர்ந்த கால்டுவெல் தமிழை கற்க துவங்கினார். கல்லூரியில் படித்த காலத்தில் தனது பேராசிரியர் சாண்ட்போர்டு, கற்பிக்கும்போது கூறிய மொழி ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் மதத்தை உருவாக்க தமிழகம் வந்து தங்கியபோது உதவியது.

சென்னையில் இருந்து சிதம்பரம், தஞ்சை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என கால்நடையாகவே தமிழகத்தை வலம் வந்தார். இறுதியாக திருநெல்வேலி அடுத்த இடையான்குடி என்கிற இடத்தில் நிரந்தரமாக தங்கிய கால்டுவெல் 1847ல் இடையான்குடியில் சர்ச் உருவாக்கி சமயப்பணியை ஆரம்பித்தார்.

அப்போது ஆரிய – திராவிட மோதல் அதிகமாக நடைபெற்று வந்த சமயம். மொழிகள் அனைத்தும் ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வந்தது என்ற கருத்து வைக்கப்பட்டது. அப்போது சென்னையில் பணியாற்றிய எல்லிஸ் என்கிற ஆங்கிலேய அதிகாரி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவை ஆரிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவயைல்ல. அது தனி மொழிக்குடும்பத்தை சேர்ந்தது என்றார். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு கால்டுவெல்  தமிழராய்ச்சி பணியும் செய்தார். 15 ஆண்டுகளாம் மொழி ஆராய்ச்சி செய்து ஆவண தரவுகளோடு ஒரு நூல் எழுதி வெளியிட்டார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலங்கணம் என்கிற நூலை ஆங்கிலத்தில் எழுதி 1856ல் வெளியிட்டார் கால்டுவெல். அந்த நூலே திராவிடர்களை உலகம் முழுக்க அறிய உதவியது. அதோடு, குமரி கண்டம் என்கிற ஓரு கண்டம் இருந்தது. அங்கு வாழ்ந்த தமிழ் மக்களே இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தனர். உலகம் முழுக்கயிருந்த மக்களுடன் குமரி கண்ட மக்கள் தொடர்புகளை வைத்திருந்தனர், குமரி கண்டத்தை கடல்நீர் அழித்தபோது அங்கிருந்த தப்பிய மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு தப்பி சென்று வாழ்ந்து, சந்ததியை உருவாக்கினர் என ஆய்வு தரவுகளோடு அறிவித்தார் கால்டுவெல்.

திருநெல்வேலி மாவட்ட அரசியல் மற்றும் பொதுவரலாறு என்கிற நூலையும் எழுதியுள்ளார் கால்டுவெல். இந்த நூலை அப்போதுயிருந்த சென்னை ராஜஸ்தானியை நிர்வாகம் செய்துவந்த ஆங்கிலேய அரச நிர்வாகம்மே வெளியிட்டது. கால்டுவெண், சங்க இலக்கியம், இலக்கண நூல்கள் என அனைத்தையும் வாசித்தார்.

நாகர்கோவிலில் வாழ்ந்த மால்டா என்பவரின் மகளான எலிசாவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள், ஒரு மகன் என பிறந்தனர். 1891 ஆகஸ்ட் 28ந்தேதி உடல் நலிவுற்று இறந்தார்.

50 ஆண்டுகளுக்கு பிறு கால்டுவெல் தமிழுக்கு செய்த சேவையை முன்னிட்டு 1967ல் திமுக ஆட்சி தமிழகத்தில் முதன் முறையாக அமைந்ததும் சென்னை கடற்கரையில் கால்டுவெல்க்கு முழு உருவச்சிலை வைக்கப்பட்டது.

-nakkheeran.in

TAGS: