2 பேரை என்கவுண்டர் செய்ய போறோம்.. சேனல்களுக்கு சொல்லிவிட்டு செய்த உ.பி போலீஸ்.. கொடூரமான வீடியோ!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் ஒன்று போலீஸ் மூலம் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு பின் மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச போலீஸ் என்கவுண்டர் செய்ய போவதை முன்பே சொல்லிவிட்டு, செய்தியாளர்களை அழைத்து என்கவுண்டர் செய்துள்ளது.

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்தே அங்கு அதிக அளவில் என்கவுண்டர்கள் செய்யப்படுகிறது. தினமும் 7-8 பேர் அங்கு என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள்.

இப்படி கொலை செய்யப்படும் நபர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் அப்பாவிகள் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மனித உரிமைகள் ஆணையம் இதுவரை இந்த கொலைகளில் ஒரு சிறிய நடவடிக்கை கூட எடுத்ததில்லை.

போன் செய்து சொன்னார்கள்

உத்தர பிரதேசத்தில் அதிக முஸ்லிம் வசிக்கும், அதிக என்கவுண்டர் நடக்கும் அலிகார்க் பகுதியில் உள்ள மச்சோ கிராம போலீஸ், அங்கு இருந்த மக்களுக்கும், தேசிய ஊடகங்களுக்கும் அவசரமாக நேற்று ஒரு செய்தி அனுப்பி உள்ளது. அதில், நாங்கள் இரண்டு பேரை என்கவுண்டர் செய்ய போகிறோம் நேரில் பார்க்க விருப்பம் இருந்தால் வாருங்கள். வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு என்று அழைத்து இருக்கிறார்கள்.

வந்து குவிந்த மக்கள்

இந்த செய்தி அந்த ஊர் மக்களுக்கு மட்டுமில்லாமல், தேசிய ஊடகங்கள் எல்லோருக்கும் தீயாக பரவியது. அடுத்த 30 நிமிடத்தில் மக்கள் வெள்ளம் அந்த என்கவுண்டர் நடக்கும் இடத்தில் வந்து குவிந்தது. அதேபோல் செய்தி சேனல்களும் வீடியோ எடுக்க தயாராகி வந்து நின்றது. உலகிலேயே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட போலீஸ் என்கவுண்டர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டுக் கொன்றார்கள்

இந்த நிலையில் அங்கு இருந்த போலீஸ் குண்டு துளைக்காத உடைகளை அணிந்து கொண்டு தூரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்றை பார்த்து சுட்டனர். 8 க்கும் அதிகமான போலீஸ் இப்படி சரமாரியாக் தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் துப்பாக்கி சூட்டின் இறுதியில் 2 முஸ்லீம்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். முஸ்தகீம், நவ்சாத் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

என்ன காரணம்

நேற்று மாலை வரை இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இன்றுதான் இவர்கள் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் 6 கொலைகள் செய்துள்ளதாக போலீஸ் தெரிவிக்கிறது. ஆனால் என்னென்ன கொலைகள், எப்போது இதெல்லாம் நடந்தது என்று யாரும் விளக்கம் அளிக்கவில்லை.

அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள்

இந்த என்கவுண்டரை ஏன் இப்படி சொல்லிவிட்டு நடத்த வேண்டும் என்றும் போலீஸ் விளக்கம் அளித்து இருக்கிறது. இப்படி செய்தால்தான் சிலருக்கு பயம் வரும் என்று கூறியுள்ளனர். மேலும், போலீஸ் எவ்வளவு வெளிப்படையாக செயல்படுகிறது என்று அப்போதுதான் தெரியும் அதனால்தான் இப்படி செய்தோம் என்றுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: