பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடம் இல்லை என்று அருங்காட்சியக அதிகாரிகள் கைவிரித்து விட்டனர் – ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்

சென்னை, சென்னை சைதாப்பேட்டையில் தொழில அதிபர்  ரன்வீர் ஷா என்கிற தொழிலதிபர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 60  சிலைகள்,   அதிக எடை கொண்ட கற்தூண்களையும், அத்தனை கற்சிலைகளையும் கொண்டு செல்வதற்கு மாநகராட்சி லாரியும், கனரக கிரேன் வாகனமும் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் இது குறித்து பேட்டி அளித்த ஐ.ஜி பொன். மாணிக்கவேல் கூறியதாவது:-

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடம் இல்லை என்று அருங்காட்சியக அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இந்த சிலைகளை கொண்டு செல்வதற்கான செலவுகளை, டிஎஸ்பி ஒருவர் தற்போதைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார் என்றார். இந்த செலவு தொகை அரசிடமிருந்து வருவதற்கு தாமதமாவதால் வழக்காடுவதில் பின்னடைவு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காவல் துறையில் வழக்கு விசாரணைக்கு ஆகும் செலவு தொகையை முன்கூட்டியே வழங்க அரசு முன் வர வேண்டும். இது குறித்து டிஜிபிக்கு தான் கடிதம் எழுத உள்ளேன்.

காவல் துறையில் தமிழகம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது என தெரிவித்த ஐஜி பொன்.மாணிக்கவேல், ஒவ்வொரு வழக்கிற்கும் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் கையில் உள்ள பணத்தை செலவு செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தான் டிஜிபிக்கு கடிதம் எழுதவும் திட்டமிட்டுள்ளதாக ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

-dailythanthi.com

TAGS: