நட்புறவை வலுப்படுத்த புடின் இந்தியா வருகை

புதுடில்லி: நட்புறவு பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அக்.4 ,5 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா ரஷ்யா இடையேயான நட்புறவு பாதிக்கப்படும் சூழல் நிலவியது. ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை , இருநாடுகளிடையேயான நட்புறவு தொடரும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசு முறைப்பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் அக். 4 மற்றும் 5 தேதிகளில் இந்தியா வருகிறார். அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-dinamalar.com

TAGS: