9 கிலோ.. 50 லட்சம் பேரை கொன்றுவிடும்.. சாத்தான் கெமிக்கலை ஆய்வு செய்த இந்தூர் சைன்டிஸ்ட் கைது!

இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மோசமான கெமிக்கல் ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஃபென்டலின் என்ற கெமிக்கல் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த கெமிக்கலை போதை பொருளாக பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.

இதை வைத்து இந்தூரில் ஆராய்ச்சி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தூரை சேர்ந்த ஒரு தொழிலதிபரும், இன்னும் சிலரும் இதில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கெமிக்கலுக்கு சாத்தான் கெமிக்கல், உலக அழிவு கெமிக்கல், கருப்பு நாள் கெமிக்கல் என்று நிறைய பெயர் இருக்கிறது.

யார் இவர்கள்

இவர்கள் அடையாளத்தை அரசு வெளியிட மறுத்துள்ளது. ஒருவர் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இன்னொரு நபர் பிஎச்டி (கெமிக்கல் பிரிவில்) படித்துக் கொண்டு இருக்கும் மாணவர். இன்னொருவர் மெக்சிகோவை சேர்ந்த போதை பொருள் டீலர் என்று கூறப்படுகிறது.

என்ன கெமிக்கல் அது

இந்த கெமிக்கல் பெயர் ஃபென்டலின் ஆகும். இது மருத்துவ துறையில் மிக மிக குறைந்த அளவில் பயன்படுத்தப்படும். மிக குறைந்த அளவு ஃபென்டலின், சில வேதிப்பொருளுடன் சேர்க்கப்பட்டு, மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும். இதை மருத்துவர்கள் தவிர அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்த கூடாது.

எவ்வளவு மோசம் தெரியுமா

இந்த ஃபென்டலின் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதை அங்கு மக்கள் போதை பொருளாக பயன்படுத்துகிறார்கள். சரியாக விகிதத்தில் கலந்த இது அங்கு போதை பொருளாக விற்கபடுகிறது. இதை தினமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றுவதும் நடக்கிறது.

எப்படி பயன்படுத்தலாம்

இதை “பயோ-வார்” ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்திட முடியும் என்கிறார்கள். இது காற்றில் கலந்தால் பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதேபோல் இதை ஆயுதமாக மாற்றி பிற நாடுகளை தாக்கி கண் இமைக்கும் நேரத்தில் பலரை கொலை செய்ய முடியும்.

என்ன வீரியம்

அமெரிக்காவில் 2016ல் மட்டும் இதை அதிகமாக உட்கொண்டு 20 ஆயிரம் பேர் மரணம் அடைந்து இருக்கிரார்கள். இதில் 2 மில்லிகிராம் இருந்தால் போதும் ஒருவரை கொலை செய்ய முடியும். நேற்று இந்தூரில் கைப்பற்றப்பட்டதை வைத்து 50 லட்சம் பேரை கொலை செய்ய முடியும் என்று தெரிவிக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டனர்

இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக இந்த கெமிக்கல் இப்படி கைப்பற்றப்பட்டு இருக்கிறது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில் இது கண்டிபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதை எதற்காக சோதனை செய்தனர் என்று தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: