தமிழ் சமூகதிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு! தமிழ்க் கையெழுத்து விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ்.!

மக்கள் பாதை இயக்கத்தின் சார்பாக தமிழ்க் கையெழுத்து விழா நடைப்பெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைப்பெற்றது.

காலை 9 மணிக்கு சகாயம் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள், முதியோர்கள், பள்ளி மாணவர்கள் என திரளாக ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்த கையெழுத்து இயக்கத்தை கின்னஸ் ரிக்காட் செய்வதற்காக வீடியோ பதிவு செய்தனர்.

இந்த விழாவில் பாரம்பரிய கலைநிகழ்ச்சி, பாரம்பரிய உணவு வகைகள், சந்தை அமைக்கப்பட்டு விவசாயி கொள்முதலை முனைப்புகாட்டி  அதை மக்கள் மத்தியிலும் வெளிப்படுத்தினர்.

இந்த விழாவில் வேல்முருகன், பழநெடுமாறன், ஹரிபரந்தாமன், மணியரசன், அற்புதம்மாள், அய்யாக்கண்ணு, தியாகு, டி.வி.பிரகாஷ், கெளதமன், செல்வமணி என கலந்துகொண்டு  உரையாற்றினர்.

வேல்முருகன் பேசுகையில், இந்த தமிழ் விழா மிக முக்கியமானது. இப்போதுள்ள நிலையில் இந்த விழா மிக அவசியமானது. நான் சட்டமன்றத்தில் இருந்தபோது கல்குவாரியில், மணல் குவாரிகள், கொள்ளை போவதையும் அறிந்து அதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தேன். அப்போது சிறு சிறு நிறுவனத்திடமிருந்து காப்பாற்றி தற்போது பெரும் முதலாலியான கார்ப்பரேட் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளனர்.

இந்த விசியத்தை அய்யா சகாயம் அவர்கள் தனி மனிதனாக நின்று போராட்டம் செய்து உள்ளார். எந்த சூழ்நிலையிலும் நேர்மையாகவும் உண்மைக்கும் நாட்டு மக்களின் நலனுக்காக யார் போராடினாலும் நாங்கள் துணை நிற்போம் என்றார்.

பழநெடுமாறன் பேசியபோது, தமிழ் மொழி என்பது தனித்துவமான ஒன்று. அதை நாடு முழுவதும் போற்றப்படும். மொழி பேசப்படும் மொழி, ஆதி மொழி அந்த மொழிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த விழா இருக்கிறது. இந்த விழா நிச்சயம் கின்னஸ் சாதனை படைக்கும். தமிழ் என்ற மொழியை எவராலும் அழிக்க முடியாது என்றார்.

-nakkheeran.in

TAGS: