ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி : 73 ஐ கடந்தது

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் ரூபாய் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்.,3, காலை 9.15 மணி நிலவரம்) 73.24 என்ற மிக அதிகபட்ச சரிவுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு, சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 73.34 என்ற நிலையை எட்டியது. முன்னதாக அக்.,1 ம் தேதி வர்த்தக நேர முடிவின் போது ரூபாய் மதிப்பு 72.91 ஆக இருந்தது.

ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு 73 என்ற அளவை எட்டி உள்ளது இதுவே முதுன் முறையாகும்.

-dinamalar.com

TAGS: