சென்னை: இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ், இந்துகடவுள்களை சாத்தான் என்றும், இந்து கோவில்களை சாத்தான்களின் அரண்கள் எனவும் பேசினார். இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதுதொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து பொள்ளாச்சி, கோவை- கருமத்தம்பட்டி மற்றும் சூலுார் காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-dinamalar.com
கிறித்துவ மத பரப்பாளார் அவர்தம் எல்லையைத் தாண்டி இந்து மதத்தின் மீது பல அவதூறுகளைக் கூறி அவர்தம் கிறித்துவ மதத்தைப் பரப்ப முற்பட்டதால் இன்று இந்துக்களும் நேரடி தாக்குதலில் இறங்கி விட்டனர். இனி இது மலேசியாவிலும் நடக்கும்.