ரஷ்ய அதிபர் புடின் – பிரதமர் மோடி சந்திப்பு

புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்தடைந்தார். தொடர்ந்து பிரதமர் மோடியை, புடின் நேரில் சந்தித்து பேசினார். நாளை (அக்.5) இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிடுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டில்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் அவரை டில்லி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர்.

இப்பயணத்தில், ரூ.36 ஆயிரம் கோடி செலவில், இந்தியாவுக்கு எஸ்-400 எவுகணைகள் வாங்க இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது 400 கி.மீ., தொலைவில் உள்ள 300 இலக்குகளை கண்டு, ஒரே நேரத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. பிரதமர் மோடி, புடின் இடையேயான சந்திப்புக்கு பின் நாளை இருவரும் கூட்டறிக்கை வெளியிடுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ளும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மோடியுடன் சந்திப்பு:

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். நாளை இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிடுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

-dinamalar.com

TAGS: