லக்னோ: அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
லக்னோவில் அதி விரைவுப்படை உருவாக்கப்பட்டதன் 26ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அதிரடிப்படையினரின் நடவடிக்கை விரைவாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டுமே தவிர பொறுப்பற்றதாக இருக்கக்கூடாது. முன்னர், நக்சல் பாதித்த மாவட்டங்கள், 1012 ஆக இருந்தது தற்போது 126 ஆக மாறிவிட்டது. இன்னும் 3 ஆண்டுகளில் நக்சலைட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்குஉங்களின் கடினமான உழைப்பு, ஆர்வம் மற்றும்முயற்சியே காரணம்.
பாராட்டு
நாட்டில், நக்சலைட்களை ஒழிப்பதற்காக நீங்கள் ஆற்றிய பணிகளுக்காக உங்களை பாராட்டுகிறேன். இந்த ஆண்டு, 131 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். 1,278 பேர் கைது செய்யப்பட்டதுடன், 58 பேர் சரணடைந்தனர். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
-dinamalar.com