சபரிமலை விவகாரம்: முதல்வரை சந்திக்க தந்திரிகள் மறுப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்த பின்னர் தான் அரசுடன் பேச்சு நடத்த முடியும் என கோயில் தந்திரிகள் கூறியுள்ளனர்.

போராட்டம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை என கேரள அரசும், தேவசம் போர்டும் முடிவு செய்துள்ளன. ஆனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மதநம்பிக்கைக்கும், ஆசாரங்களுக்கும் எதிரானது என்ற கருத்து வலுத்து வருகிறது. கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு, சபரிமலை கோயிலை தந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முதல்வரை சந்திக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

பாதிப்பு

இது தொடர்பாக மோகனரு கண்டரரு கூறுகையில், அரசு முதலில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் பேசி கொள்ளலாம். பெண்களை அனுமதிப்பது என்பது கோயிலின் பாரம்பரியத்தை பாதிப்பதுடன், புனிதத்தன்மையை அழித்துவிடும். கோயிலில் பெண் போலீசாரை நிறுத்துவதும் கோயில் பாரம்பரியத்திற்கு அழிவை தான் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் கோட்டயம் மாவட்டம் செங்கனசேரியில் நடந்த பேரணியில், கோயில் தந்திரி ராஜுவரு கண்டரருவும் ,பந்தளம் அரச குடும்பத்தை சசிகுமார் வர்மாவும் கலந்து கொண்டனர்.

-dinamalar.com

TAGS: