ஒன்று திரண்ட ஊடகவியலாளர்கள்.. நக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக போராட்டம்!

சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.

தலைவர்கள் கண்டனம்

இவரது கைதுக்கு எதிராக தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலினும், வைக்கோவும் நக்கீரன் கோபாலை நேரில் சந்தித்தனர்.

செய்தியாளர்கள்

இந்த நிலையில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் அவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த போது போராட்டம் நடத்தினார்கள். காவல் நிலையம் வாசலில் நின்று போராட்டம் செய்தனர்.

வெளிமாநில பத்திரிக்கையாளர்கள்

உள்ளூர் செய்தியாளர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில செய்தியாளர்களும் இதில் கலந்து கொண்டனர். அதேபோல் இந்தியா முழுக்க இந்த செய்தி, ஊடகவியலாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோஷம் எழுப்பினார்கள்

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். போலீஸ் நிலையத்திற்கு வெளியே அமர்ந்தபடி போலீசுக்கு எதிராகவும், கைதுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: