மனைவியின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் பத்ம பூஷன் விருது பெற்ற விஞ்ஞானி விஷம் அருந்தி தற்கொலை..

கான்பூர் பலைகலைக்கழக துணை வேந்தராக 1994-ம் ஆண்டு முதல் 20017-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சர்வக்யா சிங் கடியார். இவர் என்சைமாலஜி எனும் மனித உடலில் உள்ள செல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானி ஆவார். நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை 2003-ம் ஆண்டும், பத்ம பூஷன் விருதை 2009-ம் ஆண்டும் மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

இந்நிலையில், சர்வக்யா சிங் கடியார் இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கடந்த வருடம் தனது மனைவியின் மறைவை தொடர்ந்து கடும் மன அழுத்தால் அவதிப்பட்டு வந்த கடியார், ’மனைவியின் மறைவு கொடுத்த வலியை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், குணப்படுத்த முடியாத உடல் உபாதைகள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் அவரது உறவினர்கள் கூறினர். மனைவின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் பத்ம பூஷன் விருது பெற்ற நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-athirvu.in

TAGS: