கோவை : ‘தமிழகம், புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனது’ என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.
கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபையின் 90ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:
கொள்ளையடித்துவிட்டு தப்ப முடியாது; தவறு செய்தால் சமமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுக்கு மாற்றம் தேவை; எந்தப் புரட்சியும் தொடக்கத்தில் வலியை ஏற்படுத்தும். வழிமுறைகள் கழுத்தை நெரிக்கும் வகையில் இருக்கக்கூடாது.
பருவநிலை மாறி வருவதால் இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யும் பழக்கம் நம்மிடையே அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத அளவு கனமழை பெய்த கேரளாவில் நீர் பற்றாக்குறை என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழகம் பெயர் போனது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் 20 சதவீத வறுமை, 22 சதவீத கல்வியறிவின்மை, ஏற்றத்தாழ்வு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
-dinamalar.com