இந்தியாவின் முடிவு பலன் தராது: அமெரிக்கா

வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு, இந்தியாவுக்கு பலன் தராது என அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. நவம்பர் மாதத்திற்கு பின், அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனையும் மீறி, ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்கு பின்னரும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமெரிக்கா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹீதர் நவுரட் கூறுகையில், இந்தியாவின் முயற்சி பலன் அளிக்காது. ஈரான் மீதான தடை நவ., 4 முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடை தொடர்பாக, எங்களது கூட்டணி மற்றும் நட்பு நாடுகளுடன் பேசி வருகிறோம். அப்போது, எங்களின் கொள்கைகள் குறித்து தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: