திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கியதைக் கண்டித்து பந்தளம் அரச குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் பக்தர்கள், பெண்கள் போராட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தலைமை செயலகம் வாசல் அருகே, பந்தளம் அரசு குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-dinamalar.com