பதட்டத்தில் சபரிமலை.. 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி!

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலை சுற்றி பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் நடக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் மோசமாக தடியடி நடத்தி இருக்கிறார்கள்.

இன்று முழுக்க நாத் பகுதியில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.கோவிலுக்கு வெளியே கலவரம் நடந்த சூழ்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.

சபரிமலை அருகே உள்ள நிலக்கல் மற்றும் பம்பா பகுதியில் போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் சபரிமலை கோவிலை சுற்றி பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 22ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அங்கு தற்போது அதிக அளவில் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: