முடிவெடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம்: கேரள அரசு

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேவசம்போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு கூறியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருந்தது.இதனை எதிர்த்து இரு தினங்களாக கேரளாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயார் என தேவசம் போர்டு தலைர் பத்மகுமார் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: சீராய்வு மனுதாக்கல் செய்வது குறித்து நாளை ஆலோசிக்கப்படவுள்ளது. சீராய்வு மனுதாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? எந்த ஒரு அரசியல் கட்சிகளின் பின்னால் தேவசம் போர்டு செல்லவில்லை. என கூறினார்.

வரவேற்பு

இது தொடர்பாக கேரள அறநிலையத்துறை(தேவசம்) அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலை வரும் பக்தர்கள், எந்த பிரச்னையும் இன்றி அய்யப்பனை வணங்கி செல்ல வேண்டும். இதற்காக தேவசம்போர்டு எடுத்த முடிவை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே,, இந்த விவகாரத்தில் தேவசம்போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு கூறியுள்ளது. தேவசம்போர்டு தனி அமைப்பு எனவும் தெரிவித்து உள்ளது.

-dinamalar.com

TAGS: