அமிர்தசரஸ்: ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து – 62 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராம்லீலா கொண்டாட்டத்தின் போது ராவண தகன நிகழ்ச்சியில், ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை ஆணையர் சுத்ஷூ சேகர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று சுமார் ஆறரை மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமிர்தசரஸின் இணை ஆணையர் கமல்ஜீத் சிங் இதனை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.

ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து
ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து

தோபி காட் அருகில் ராவண உருவ பொம்மையை எரித்த போது, எதிர்பாராத விதமாக அது கீழே விழந்தது. அந்த இடத்திற்கு அருகில் ரயில்வே கேட் இருந்தது. நெருப்பில் இருந்து தப்பிக்க ரயில்வே கேட் பக்கமாக மக்கள் ஓடியபோது, அங்கு ரயில் வந்ததில் அதில் அடிபட்டு பலரும் உயிரிழந்ததாக பிபிசி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் தெரிவிக்கிறார். ரயில் தடத்தில் பலரின் உடல்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். -BBC_Tamil

TAGS: