காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

என்கவுன்டர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் லாரோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்து உள்ளனர். 

மோதல்

துப்பாக்கி சண்டை நடந்த இடத்திற்கு யாரும் வர வேண்டாம் என பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், இதனையும் மீறி, அப்பகுதியை சேர்ந்த சிலர் குவிந்தனர். அவர்கள், பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதில், குல்கம் மாவட்டத்தின் லாரோ பகுதியை சேர்ந்த உபாயத் லாவே என்பவர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

தாக்குதல்

அவந்திபூரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.

-dinamalar.com

TAGS: