திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு!

திருச்சி என்றாலே அரசியல்கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் நம்பிக்கை அனைத்து கட்சியினருக்கும் உண்டு. அதுவும் பொன்மலை ஜி கார்னர் மைதானம் என்பது அனைத்து திராவிட கட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே போன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெற்றது. திராவிட கட்சிகளுக்கு இணையாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் திருச்சியில் மனிதநேயமக்கள் கட்சியின் சார்பில் அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் அனைத்து கட்சியின் மாநில தலைவர்கள் கலந்து கொண்டு பிரமாண்டமாக நடைபெற்றது அதே போன்று தற்போது திருச்சியில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

sd

அதிகாரம், அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியலாய் அணி திரள்வோம், அதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருச்சி ஜி. கார்னரில் இன்று நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜோதிபாபுலே பெயரில் மாநாட்டு திடலின் நுழைவுவாயில் அமைக்கப்பட்டிருந்தது.

sd

காலை 10 மணி முதல் ‘நெருக்கடிக்குள்ளாகும் மதசார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கும், ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும் என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கும் நடைபெற்றது.

sd

மாலை 3 மணிக்கு பெரியார் அரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி, துணைத்தலைவர் தெகலான் பாகவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

’தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணு உலை 15 நாட்களுக்கு ஒருமுறை இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த இரு ஆலைகளையும் மூடாவிட்டால் பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்றார் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்.

-nakkheeran.in

TAGS: