பஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்

ஜலந்தர்: கேரளாவில் பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு மிஷனரியில் தங்கிய கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிரான்கோ மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தததால் அவர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த குரியகோஷ் என்ற பாதிரியார் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செயின்ட்பால் கான்வென்ட் பள்ளியின் ஒரு விடுதியில் மர்ம முறையில் இறந்து கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலையா என சந்தேகம்

பாதிரியார் குரியகோஷ் பிஷப் பிரான்கோவுக்கு எதிராக போலீசாரிடம் சாட்சியம் அளித்துள்ளார். இதனால் அவரது சாவில் மர்மம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் குரியகோஷ் குடும்பத்தினர் அவரது சாவு குறித்து கூறுகையில்;
குரியகோஷ்சுக்கு சமீப காலமாக கொலை மிரட்டல் இருந்த வந்தது. இதனால் அவர் மரணம் குறித்து சந்தேகம் எழுவதாகவும், போலீசார் முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார், பிஷப் கைது தொடர்ந்து, தற்போது பாதிரியார் கொலை மேலும் பல யூகங்களை எழுப்பியுள்ளது.

-dinamalar.com

TAGS: