டெல்லி: பணியிட பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்களை விசாரிக்க மத்திய அரசு 9 பேர் கொண்ட குழு அமைத்து இருக்கிறது.
இந்தியா முழுக்க ”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இந்த ஹேஷ்டேக் நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.
”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு தனி குழு அமைக்க இருக்கிறது. இன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் முக்கிய கூட்டம் நடந்தது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன் முடிவில் பணியிட பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்களை விசாரிக்க மத்திய அரசு 9 பேர் கொண்ட குழு அமைத்து உள்ளது. இதில் அளிக்கப்படும் புகார்கள் அனைத்தையும் விசாரிக்கும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
பாலியல் தொல்லை தொடர்பாக தொடர்ந்து நிறைய புகார்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார்.
இந்த குழுவில் 9 நபர்கள் இருப்பார்கள். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.