புதுடில்லி : முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்துள்ள நிபந்தனைகளில், முல்லை பெரியாறுக்கு மாற்றமாக புதிய அணை கட்டும் ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை சமர்ப்பிக்கவும் கேரளா, தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
-dinamalar.com