பழவேற்காடு முகத்துவாரம் அமைக்கும் திட்டம்- மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு நிராகரிப்பு

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் தமிழக மீன்வளத்துறை திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு நிராகரித்ததுள்ளது.

பழவேற்காடு ஏரியில்  27கோடி மதிப்பில் முகத்துவாரம் அமைக்க தமிழக மீன்வளத்துறை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவிடம் அனுமதி கோரி இருந்தது.

இந்த முகத்துவாரத்தின் இடதுபக்கம் 160மீ, வலதுபக்கம் 150மீட்டருக்கு பெரும் பாறைகளை கொட்டி சுவர் அமைக்கப்படும். இந்த சுவர்களுக்கிடையே 3மீட்டர் ஆழத்திற்கு முகத்துவாரம் தூர்வாரி ஆழப்படுத்தப்படும். இதன்மூலம் எல்லா பருவகாலங்களிலும் ஏரியின் முகத்த்துவாரம் கடலோடு திறந்திருக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 20ஆயிரத்து 5150 க்யூபிக் மீட்டர் மணல் அகற்றப்படும். இரண்டு பக்க சுவர் எழுப்புவதற்கு 1லட்சத்து 27ஆயிரத்து தொள்ளாயிரம் டன் பாறைகள் பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்திற்கு கடலோர ஒழுங்காற்று மண்டல விதிகளின் கீழ் அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

அதிக அளவில் கடல் மணலை தூர்வாரவிருப்பதால் சுற்றுச்சூழல் தாக்கீது அறிவிக்கை 2006ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழவேற்காடு ஏரியின் ஒட்டுமொத்த சூழல் அமைப்பும் அழிக்க கூடிய சூழல் ஏற்படும். பழவேற்காடு ஏரி சர்வதேச சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு தெரிவித்துள்ளது.

-nakkheeran.in

TAGS: