புதுடில்லி: தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் காற்று மாசினால் டில்லிவாசிகள் சுவாசக்கோளாறால் அவதியுறுகின்றனர்இந்நிலையில் காற்று மாசினை கட்டுப்படுத்துவது குறித்து துணைநிலை கவர்னர் தலைமையில் உயரதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
இக்கூட்டத்தில் பழைய தனியார் கார்கள், வாகனங்கள் ஆகியவைக்கு தடை விதிப்பது குறித்தும், தேசிய தலைநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நவ -1-ம் தேதி முதல் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு தடை விதிப்பது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-dinamalar.com