புதுடில்லி : பாக்., பயங்கரவாத அமைப்பினர் காஷ்மீர் சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்.,கில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் உள்ள சிறுவர்கள் பலரை கடத்திச் சென்று, கட்டாயமாக பயங்கரவாத பயிற்சி அளித்து வருவது தெரிய வந்துள்ளது. காஷ்மீரின் டிரால் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் அளித்த பேட்டியில் இது தெரிய வந்துள்ளது.
காஷ்மீர் சிறுவர்களை கேடயமாக பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாகவும் அவன் கூறி உள்ளான். கடத்திச் செல்லப்படும் சிறுவர்களுக்கு குறிபார்த்து சுடுதல், ஆயுதங்களை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பாக நீட் தேர்வு போன்ற உயர்கல்விக்கு செல்வதற்கான பயிற்சி பெறும் மாணவர்களை குறிவைத்தே பயங்கரவாதிகள் கடத்திச் செல்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு கடத்திச் செல்லப்படும் சிறுவர்கள் மீண்டும் தங்களின் வீட்டிற்கு செல்வதற்கோ அல்லது குடும்பத்தினரை சந்திப்பதற்கோ அனமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
-dinamalar.com