கவுகாத்தி: அசாமில் மேற்குவங்க மாநிலத்தவர்கள் 5 பேரை உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாமில் அரசுக்கெதிராக உல்பா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற உல்பா-1 என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள்,நேற்று மாலை 7 மணியளவில் தின்சுகியா மாவட்டம் தோலா சாதியா என்ற பாலம் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 பேரை கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பியோடினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.இந்த சம்பவத்திறகு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலையில் என்.சி.ஆர். எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவுஅமல்படு்த்தியதன் விளைவு தான் என கூறினார். சம்பத்திறகு அசாம் பா.ஜ. முதல்வர் சர்பானந்தா சோனோவால், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-dinamalar.com