சண்டிகர்: தமிழகத்திலிருந்து வெகு தொலைவில், டெல்லிக்கு வடக்கே உள்ள ஒரு மாநிலத்தில், தமிழ் 2வது அதிகாரப்பூர்வ மொழி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
பஞ்சாப்பிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவானதுதான், ஹரியானா. பல மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதிதான் அம்மாநிலமும் உதயமானது.
ஆனால் அப்போது பஞ்சாப் அரசு, சண்டீகரை சவலை குழந்தை போல நடத்தியது. பஞ்சாப்பும், சண்டீகரும் கலாச்சாரத்தில் ஒரே மாநிலம் மாதிரிதான் என்று பரப்பப்பட்டது.
முதல்வர் அறிவிப்பு
ஹரியானாவின் முதலாவது முதல்வராக பன்சி லால் பதவியேற்றதும், 1969ம் ஆண்டு, திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், தமிழை அம்மாநிலத்தின் 2வது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தார். பெரிய அளவில் தமிழ் குடும்பங்கள் இல்லாத ஹரியானாவில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதே, ‘நாங்க வேற மாதிரி’ என்று பஞ்சாப்புக்கு புரிய வைக்கதான்.
தனித்துவம்
பஞ்சாப்பிலிருந்து தங்கள் தனித்துவத்தை காப்பாற்றிக்கொள்ள, தமிழை துணைக்கு அழைத்தது ஹரியானா. தனித்துவம் மிக்க தமிழை துணையாக கொள்வதே, தங்கள் தனித்துவத்தை காக்க உதவும் என்று பன்சிலால் நினைத்தார்.
இணக்கம்
ஹரியானா தனது தனித்துவத்தை காத்துக்கொண்டது. தலைநகர், மொழிச் சண்டைகளில் இருந்து பஞ்சாப்பிடமிருந்து விடுபட்டது. இதன்பிறகு பஞ்சாப்புக்கும், சண்டீகருக்கும் இணக்கம் ஏற்பட்டது.
40 வருடங்கள்
இதன்பிறகு 40 வருடங்களாக தமிழே அங்கு 2வது அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. ஆனால், புபிந்தர் சிங் ஹூடா முதல்வராக இருந்தபோது, 2010ம் ஆண்டு பஞ்சாபியை 2வது அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றி உத்தரவிட்டார். நேற்று ஹரியானா தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த தகவல் சுவாரசியமானது.