இந்தியாவில் இஸ்லாமிய பெயர் தாங்கிய நகரங்களின் பெயர்களை மாற்றும் வேலை நடந்து வருகிறது. தீவிர வலதுசாரி இந்து கருத்தியலாளர்கள் இஸ்லாமிய பெயருள்ள நகரங்களை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். சில மாநிலங்களின் அரசுகளும் அவர்களுக்கு செவி சாய்த்து பெயர்களை மாற்றி வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் நம் அண்டை நாடான பாகிஸ்தான் எப்படி இருக்கிறது?
இந்தியா போல்தான் இருக்கிறது.
ஆம், நகரங்கள், ஊர்களின் பெயரை மாற்றும் விஷயத்தில் பாகிஸ்தானும் விதிவிலக்கு அல்ல.
இந்தியாவிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட இந்த நாடு, தம் இந்திய பாரம்பர்ய பெயர்களை உதிர்த்து, அரபிய பெயரை தழுவிக் கொள்வதில்தான் பெரும் விருப்பம் கொள்கிறது.
மாற்றப்படும் பெயர்கள்
பெயர் மாற்றப்படும் விஷயத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தலைநகர் லாகூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஊர் பாய் பெரு என அழைக்கப்பட்டது. இதுவொரு சீக்கிய பெயர். அதாவது, இந்த நகரத்தை பார்வையிட்ட ஏழாவது சீக்கிய குரு, அங்கிருந்த சீக்கிய பக்தர் பாய் பெருவின் பக்தியால் கவரப்பட்டு இந்த நகரத்திற்கு பாய் பெரு என பெயரிட்டார். ஆனால், இவை அனைத்தும் கடந்த காலம் ஆகிவிட்டது. இது ‘போல் நகர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இவை மட்டுமல்ல, ஏராளமான ஊதாரணங்கள் உள்ளன். பல இந்து மற்றும் சீக்கிய பெயர் தாங்கிய ஊர்களின் பெயர் இஸ்லாமிய பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.
கிருஷ்ணன் நகர் இஸ்லாம்புரா என்றும், ஜெயின் மந்திர் செளக் பாபர் மஸ்ஜித் செளக் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டப் பின் பாகிஸ்தானில் போராட்டகாரர்கள் ஜெயின் கோயிலை நாசப்படுத்தினர். அதன்பின் அதிகாரப்பூர்வமாக அந்த பகுதி பாபர் மஸ்ஜித் செளக் என்று பெயர் மாற்றப்பட்டது.
பலூச்சிஸ்தானில் உள்ள இந்து பாக் எனும் பகுதி முஸ்லிம் பாக் என பெயர் மாற்றப்பட்டது.
ஆனால், உள்ளூர் பேச்சுவழக்கில் இந்த பகுதிகள் பழைய பெயர்களின் மூலமாகதான் அடையாளப்படுத்தப்படுகிறது. பழைய பெயர்களை சொல்லிதான் அழைக்கிறார்கள்.
சில ஊர்களின் பெயர் மாற்றப்பட்டு இருந்தாலும், பல ஊர்களுக்கு இன்னும் இந்து மற்றும் சீக்கிய பெயர்கள்தான் இருக்கின்றன.
இந்து மற்றும் சீக்கிய பெயர்கள்
லாகூர் சுற்று வட்டாரத்திலேயே, தயால் சிங் காலேஜ், குலாப் தேவி மற்றும் கங்கா ராம் மருத்துவமனை, குயிலா குஜ்ஜார் சிங் பகுதி. லக்ஷ்மி செளக், சாண்ட் நகர், கோட் ராதா கிஷான் என இந்து, சீக்கிய பெயர் தாங்கிய பகுதிகள் நிறைய உள்ளன.
கராச்சியில், குரு மந்திர் செளராங்கி, அட்மரம் பிரிதம்தாஸ் சாலை, ராம்சந்திரா கோயில் சாலை, குமார் தெரு என்றும் பலுச்சியில் ஹிங்க்லஜ் என்றும் கைபர் மாகாணத்தில் ஹரிபூர் என்றும் இந்து பெயர் கொண்ட பகுதிகள் உள்ளன.
இந்தியா தமது மதசார்பின்மை பாதையிலிருந்து விலகி மற்றொரு பாகிஸ்தானாக மாறி வருகிறது.
பிழைகளிலிருந்து பாடம்
பாகிஸ்தான் தம் பிழைகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் அந்த பாடத்தை கடினமான வழியில் கற்று இருக்கிறது. தீவிரவாதம், படுகொலையினால் பாதிக்கப்பட்டபின் அந்த பாடத்தை கற்று இருக்கிறது.
பன்மைதுவத்தைன் ஏற்றுக் கொள்ளும் பண்பு பாகிஸ்தானில் வளர்ந்திருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எந்தளவு பாகிஸ்தான் சொந்தமோ அதே அளவு மத சிறுபான்மையினருக்கும் சொந்தம் என்றும், சிறுபான்மையினரை அங்கீகரிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
அவர்களை ராணுவத்தில் சேர்க்க, அரசியல் மைய நீரோட்டத்தில் இணைக்க, அவர்களின் பாரம்பர்யமான வழிபாட்டுத் தலத்தை காக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் சரியான இடத்தில் இருக்கிறதா என்று சொல்ல முடியாது. ஆனால், பல காலத்திற்கு பின் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. -BBC_Tamil
“இந்தியா தமது மதசார்பின்மை பாதையிலிருந்து விலகி மற்றொரு பாகிஸ்தானாக மாறி வருகிறது.”
மதச்சார்பின்மை நாடென்று கூறிக் கொண்டு மற்றொரு பக்கம் அயலார் மதத்தை வளர்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளும் நிருவாகக் கட்டமைப்பில் செயல்படும் மத போதகர்களின் தீவீர மதப்பிரச்சாரத்தால் விளைந்த ‘நன்மை’ இது.
‘தஞ்சோங் மாலிம்’ மாவட்டம் ‘முவாலிம்’ என்று பெயர் மாற்றப்பட்ட பொழுது நம்மால் எதுவும் செய்ய இயலவில்லை என்பதும் உண்மைதானே!