புனே:சாலையில் துப்பினால், அபராதத்தை செலுத்துவதுடன், அதை சுத்தம் செய்யும் தண்டனையும் வழங்கும் திட்டம், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேயில் செயல்படுத்தப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் உள்ள புனே மாநகராட்சியில், சாலையில் துப்பினால், அபராதம் விதிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, அபராதத்துடன், துப்பியதை சுத்தம் செய்யும் தண்டனையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி உயரதிகாரிகள் கூறியதாவது:துாய்மையான நகரங்களுக்கான பட்டியலில், இந்தாண்டு, 10வது இடத்தைப் பிடித்தோம். வரும், 2019க்கான துாய்மையான நகரங்களுக்கான போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளோம். அதற்காக, சாலையில் துப்புவதை தடுக்கும் வகையில், துப்பினால், 150 ரூபாய் அபராதத்துடன், அதை சுத்தம் செய்யும் தண்டனையும் சேர்த்து வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-dinamalar.com