ராய்பூர் : நக்கசல்களின் மிரட்டல்களையும் மீறி சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் முதல்கட்ட ஓட்டுப்பதிவில் ஏராளமான மக்கள் ஓட்டளித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்புக்கு உள்ளான 18 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில் மன்பூரில் உள்ள பர்தோனி கிராமத்தில், மக்கள் தேர்தலில் ஓட்டளிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என நக்சல் அமைப்பினர் பல இடங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்துள்ளனர். இருந்தும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று, ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர்.
தண்டேவாடா பகுதியில் பல கிராமங்களில், ஓட்டளித்த அடையாள மை இருந்தால் விரல்கள் துண்டிக்கப்படும் என நக்சல்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இருந்தும் அப்பகுதியை சேர்ந்த பலரும் துணிச்சலுடன் வந்து ஓட்டளித்துள்ளனர். நக்சல்கள் மிரட்டல் விடுத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் சென்று, ஓட்டுப்போட பாதுகாப்பான சூழலை தாங்கள் அமைத்து தருவதாக உறுதி அளித்து, பலரையும் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்துள்ளனர்.
-dinamalar.com