சுப்ரீம் கோர்ட் முடிவு குறித்து ஆலோசித்து முடிவு: முதல்வர் விஜயன்

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முடிவு குறித்து முடிவு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதித்து பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் சம்மதம் தெரிவித்துள்ளது.

தடையில்லை

கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 10 முதல் 50 வயது பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு தடையில்லை என கோர்ட் தெளிவாக கூறியுள்ளது. மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர், மறுசீராய்வு மனு குறித்து ஜன.,22ம் தேதி விசாரணை நடக்க உள்ளது. இது தொடர்பாக அரசு, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யும் என்றார்.

கேரள அமைச்சர் கருத்து:

கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: மறுசீராய்வு செய்வதென்ற சுப்ரீம் கோர்ட்டின் முடிவை நான் ஏற்று கொள்கிறேன். இது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கினாலும் அதனை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். அரசு தான் சொன்னதில் இருந்து பின் வாங்காது. இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: