புயல் நிவாரண பணிகளை ஐகோர்ட் கண்காணிக்கும்

சென்னை: சமீபத்திய கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவும், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சேஷாயி, நாராயணன் தங்களின் உத்தரவில்: புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிந்துள்ளோம். நிவாரண பணிகள் ஒரே நாளில் முடிந்து விடாது. நிவாரண பணிகள் எவ்வாறு நடக்கிறது என்பதை பார்த்து பின்னர் தேவைப்படும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். மேலும் தற்போது நடக்கும் நிவாரண பணிகளை கோர்ட் கண்காணிக்கும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு வரும் 22 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-dinamalar.com

TAGS: