ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிப்பேன்… எங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்… -பொன்.மாணிக்கவேல்

உயர்நீதிமன்றம் இல்லையென்றால் நானும் இல்லை, இந்த குழுவும் இல்லை, இந்த ஆப்பரேஷனும் இல்லை. உயர்நீதிமன்றம்தான் பழமையான பொருட்களெல்லாம் வெளிநாடுகளிலிருந்து மீட்டெடுக்கவேண்டும், திருட்டை குறைக்க வேண்டுமென கடுமையான முயற்சி செய்தது உயர்நீதிமன்றம். உயர்நீதிமன்றம் இல்லையென்றால் நாங்களெல்லாம் இல்லை. இந்த வழக்குகளை உறுதியாக ஒரு வருடத்திற்குள் முடிப்பேன், ரொம்பநாள் நான் இழுக்கமாட்டேன். ஆஸ்திரேலியாவிலிருந்து 7 சிலைகள் வரவேண்டியிருக்கிறது. கூடுதலாக ஒரு சிலையையும் கண்டுபிடித்துள்ளோம், இந்த சிலையை 30 கோடிக்கு 2000 ஆண்டில் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் அதை கொடுக்க சம்மதித்துள்ளனர். நிறையவை 36 வருடங்களுக்கு முன்னால் நடந்தவை. அவற்றிற்கான எஃப்.ஐ.ஆர். கூட இல்லை நான் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறேன். இந்த குழு விசாரிக்கும் குற்றங்களெல்லாம் நேற்றோ அல்லது அதற்கு முன்தினமோ அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பாகவோ நடந்ததில்லை. எல்லாம் 30, 35 வருடங்களுக்கு முன்பு நடந்தவை அவற்றிற்கான எஃப்.ஐ.ஆர். கூட இல்லை. அப்போது நாங்கள் பணியில்கூட இல்லை இவ்வளவு உங்களில் சிலர் அப்போது பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால் எங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள், நாங்கள் மிகவும் இக்கட்டான, கடுமையான சூழ்நிலையிலேயே வேலை செய்கிறோம். ராஜராஜசோழன் வழக்கெல்லாம், வழக்கே கிடையாது, எஃப்.ஐ.ஆர்.-ஏ கிடையாது.

என்னுடன் பணியாற்றிய நிறையபேர் வந்திருந்தாங்க. நானே எதிர்பாக்கல நிறைய கான்ஸ்டபிள்ஸ் வந்திருந்தாங்க. கான்ஸ்டபிள் சொன்னாங்க ஐயாவ புடிக்கும் அப்படினு, பாராட்டுவது அப்படிங்குறது வேற, புடிக்கும்னு சொல்றது வேற. அதைவத்து, சரி நாம ஓரளவுக்கு சரியாக வேலை பார்த்திருக்கோம், வாழ்ந்திருக்கோம் அப்படிங்குற திருப்திகிடைத்துவிட்டது. நான் சில கடுமையான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துவேன், நெருக்கடி கொடுப்பேன், அதிக நேரம் வேலை பார்ப்பேன். அப்படியே எல்லாரும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பேன். அதனால என்மேல அவங்களுக்கெல்லாம் கொஞ்சம் வருத்தமெல்லாம் இருந்திருந்தாலும் கூட என்னை விட்டுக்கொடுக்கமா இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நன்றி.

-nakkheeran.in

TAGS: