750 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.1,064 மட்டும் தானா?

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், நான்கு மாதம் வயலில் கஷ்டப்பட்டு 750 கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்தார். ஆனால், வெறும், 1,064 ரூபாய்க்கு தான் அது விலைக்கு போனது. வெறுப்படைத்த அந்த விவசாயி அந்த தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு மணியார்டர் செய்து விட்டார்.

ஒபாமாவுடன் பேசியவர்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், நிபாத் பகுதியை சேர்ந்த விவசாயி சஞ்சய் சாத்தே. கடந்த, 2010ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வந்த போது, அவருடன் உரையாட சஞ்சய் சாத்தேவே தான், மத்திய வேளாண் அமைச்சகம் தேர்வு செய்து இருந்தது. அந்த அளவுக்கு பிரபலமான விவசாயி சஞ்சய் சாத்தே, தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து கூறியதாவது:

எந்த கட்சியையும் சாராதவன்

நான்கு மாதம் வயலில் கஷ்டப்பட்டதால், 750 கிலோ வெங்காயம் கிடைத்தது. நிபாத் மொத்த கொள்முதல் சந்தைக்கு வெங்காயத்தை எடுத்து சென்ற போது, ஒரு கிலோ வெங்காயத்திற்கு, ஒரு ரூபாய் மட்டுமே தருவதாக கூறினர். இறுதியாக, ஒரு கிலோ, ஒரு ரூபாய் 40 காசுகள் என்ற விலைக்கு வெங்காயத்தை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. அதில் எனக்கு கிடைத்த தொகை, 1,064 ரூபாய் மட்டுமே.

-dinamalar.com

TAGS: