புதுடில்லி : காற்றுமாசு பிரச்னையை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக டில்லியில் காற்று மாசுபாடு அபாய அளவிலேயே இருந்து வருகிறது. இத்துடன் தற்போது பனிமூட்டமும் அதிக அளவில் உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் மூச்சு பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், காற்று மாசுபாடு பிரச்னைகளை கட்டுப்படுத்த தவறிய டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது. அத்துடன், இந்த அபராத தொகையானது டில்லி அரசு அதிகாரிகளின் சம்பவத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் மக்களிடம் இருந்தும் வசூலித்து செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அப்படி அபராதத்தை செலுத்த தவறினால் மாதந்தோறும் ரூ.10 கோடி செலுத்த வேண்டி வரும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
-dinamalar.com