மும்பை வடமேற்கே பயங்கர காட்டுத் தீ: தேசிய பூங்கா அழியும் அபாயம்

மும்பை: மும்பையி்ன் வடமேற்குபகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை தானே மாவட்டம் கோரேகாவ்ன் வடமேற்கே ஹபால்பாடா மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது. தீ மளமளவென பரவி வருவதால் அருகே உள்ள சஞ்ய்காந்தி தேசிய பூங்கா தீக்கிரையாகி வருவதாகவும் இங்குள்ள அரிய வகை உயிரினங்கள் தீயில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்த வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடிவருகின்றனர். வனத்தீ காரணமாக மேற்குஎக்ஸ்பிரஸ் சாலைபகுதி மூழுவதும் பெரும் பாதிப்புள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-dinamalar.com

TAGS: