காவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது.. சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி

பெங்களூர்: மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தியது.

இதில் மேகதாதுவிற்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

மேகதாது தீர்மானம்

மேகதாதுவிற்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் வாசித்தார். அதில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு சரியாக தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு இருக்கிறது.

அனுமதி

இது தொடர்பான மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. இதற்கு எதிராக நாம் இப்போது தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.

கேள்விகள்

தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இந்த தீர்மானத்தின் மீதான கேள்விகளை உறுப்பினர்கள் கேட்கலாம். இதுகுறித்து சட்டசபை உறுப்பினர்கள் விவாதம் செய்யலாம். ஆனால் உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

அரசு விளக்கம்

தமிழக அரசு ஏற்கனவே இயற்றியுள்ள தீர்மானங்கள் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தமிழகத்திடம் அணைகட்ட அனுமதி வாங்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது. ஆனால் அதையும் கர்நாடக அரசு அதையும் மீறி இருக்கிறது.

அனுமதி

மத்திய அரசு இந்த திட்டத்தின் சோதனைக்கு அனுமதி வழங்கியதை தமிழக அரசு கண்டிக்கிறது. மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் செயல் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. தீர்ப்பை மீறும் வகையில் இரண்டு அரசுகளும் செயல்பட்டு இருக்கிறது.

நிறைவேறியது

கர்நாடக அரசோ இல்லை அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ தமிழக அரசின் அனுமதி இன்று காவிரியில் எந்த கட்டுமானமும் செய்ய கூடாது. காவிரியில் மேகதாது அணைகட்ட முயல கூடாது. மத்திய அரசு இதை தடுக்க வேண்டும் என்று தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றினார்.

tamil.oneindia.com

TAGS: