புதுடில்லி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.கவர்னர் ஆட்சி நடக்கும் ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாதிகள் மீது, பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகளை அடுத்து, அவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இது குறித்து, பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, ஜூன், 25 முதல், செப்., 14 வரை, 80 நாட்களில், 51 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதே சமயம், பாதுகாப்பு படையினர் உட்பட, எட்டு பேர் உயிர்இழந்தனர்; 216 பேர் காயமடைந்தனர்.செப்., 15 முதல், டிச., 5 வரை நடந்த தாக்குதலில், 85 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பதில் தாக்குதலில், பொது மக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்; 170 பேர் காயமடைந்தனர்.காஷ்மீர் பள்ளத்தாக்கில், வெளிநாட்டினர் உட்பட, 240 பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர். அவர்களில், இந்த ஆண்டு மொத்தம், 232 பேர் கொல்லப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
-dinamalar.com